திங்கள், 10 ஆகஸ்ட், 2009

சிந்தித்து செயற்படுவோமே!!!!!!!

யாரையும் விமர்சிப்பதோ,எவரையும் கொச்சைபடுத்துவதோ இந்த சிறியவனின் நோக்காமல்
அனைத்து தமிழ் பேசும் மானுடர்க்கும் வலைத்தளம்மூடான இந்த சின்னவனின் பணிவான வணக்கங்கள் !!!!!!!!
ஒரு பெரும் போராட்ட சகாப்தம் போராடியவர்களை மட்டுமல்லாமல்,ஒரு பெரும் மக்கள் கூட்டத்தின் வாழ்க்கையையும் நிர்கதியாக்கி விட்டு முடிவுக்கு வந்திருக்கிறது!!!அடுத்தது என்ன? பிரபாகரன் இருக்காரா?இல்லையா? பட்டிமன்றம் வைக்கலாம்! இல்லை கே.பி யை கைது செய்தது சரியா பிழையா? வாதாடலாம்!!! அட அதுவும் இல்லாட்டி கோயில் திருவிழாக்கள் செய்யலாம்!!அதுவும் இல்லாட்டி தமிழ் கலாச்சார விழாக்கள் செய்யலாம்!!! அப்ப அந்த வதை முகாம்களில் உள்ள உறவுகளின் நிலை? அட ஆமாம் மறந்தே போச்சே,கொடி பிடித்து கோசம் போட்டோமே? ஐநாவில் கூட ஆர்பாட்டம் செய்தோமே?இப்போ....? "என்னங்க பகிடியா விடுறீங்க! அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே.நாங்க நல்லூர் திருவிழாவுக்கு போறத்துக்கு TICKET கூட பதிவு பண்ணிட்டம்ங்க".....அது சரி.........
எமது சொந்தங்களுக்கு உதவிசெய்ய வெளிநாட்டில் மட்டுமல்ல,உள்நாட்டிலும் யாரும் இல்லை என்பதை காட்டி நிக்கிறது யாழ்ப்பான மாநகரசபை தேர்தல் முடிவுகள்........எனி அவர்களின் அடுத்த கட்ட வாழ்க்கை...?சிங்களம் தான் கருணை காட்ட வேண்டும்...
தமிழீழ தனிநாட்டு போராட்டம் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்ற நிலையில்......தனிநாடு ஒன்று கிடைக்காமல் போனதற்கு முக்கிய காரணம் பிராந்திய வல்லரசுகள்.விடுதலை புலிகளின் தோற்றம்,கொள்கைகள் அவர்கள் பாதையில் போய்க்கொண்டிருந்த காலகட்டத்தில்தான்,தென் ஆசியாவை குறிவைத்து காய் நகர்த்த ஆரம்பித்தது அமெரிக்கா.அதற்கு தளமாக அமெரிக்கா கண் வைத்த இடம் இலங்கை!!!இது இந்தியாவுக்கு பெரியதொரு பாதுகாப்பு அச்சுறுத்தலை கொடுத்ததோடு மட்டுமல்லாமல்,இந்திய பொருளாதரத்தையும் சீர்குலைக்கும்....இதை எப்படி முறியடிப்பது என்று இந்தியா மண்டையை கசக்கி கொண்டிருந்த போதுதான்,அவர்கள் கண்ணுக்கு பட்டது இலங்கையில் முளைவிட்டு அரும்ப தொடங்கிய ஆயுதக்குளுக்கள்.(அப்போதே இந்தியா ஒரு கணக்கும் போட்டது...அது என்னவென்றால் ஆயுதகுளுக்களுக்கு இடையே இருக்கின்ற ஒற்றுமை இன்மையை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதோடு,தங்களது திட்டம் நிறைவேறியவுடன் இவர்களை தடம் தெரியாமல் அழித்துவிடுவது).பிறகு சொல்லவா வேண்டும்,அப்படியே அள்ளி கொண்டு போய் தங்கள் நாட்டில் வைத்து,தங்கள் இராணுவம் மூலம் பயிற்சி கொடுத்து தாலாட்டியது!
இந்தியாவின் திட்டம் அமோக வெற்றிபெற,ஆயுத குழுக்களும் மெல்ல ஆட்டம் காண தொடங்கினார்கள்,ஆனால் இந்தியாவே எதிர்பார்க்காத வகையில் விடுதலை புலிகள் மட்டும் பிரபாகரன் தலைமையில் தங்கள் கொள்கையில் பயணிக்க ஆரம்பித்தார்கள்.இது இந்தியாவை அப்போது அதிகம் சினம்மூட்டியதோ தெரியாது?ஆனால் JR ஐ மட்டும் மண்டை காய வைத்தது.அன்று JR போட்ட அந்த மதிநுட்பமான திட்டம்தான் இந்தியாவையும்,விடுதலை புலிகளையும் கடைசிவரை ஒன்று பட விடாமல் தடுத்து எனலாம்.தன் அருகிலே தனி நாடு ஒன்று கிடைத்தால் அதுவும் ஒரு கட்டுகோப்பான தனி தமிழ் அரசு நிறுவப்பட்டால் ,தனது நாட்டில் இருக்கும் தமிழர்களும் தனியாக பிரிய முட்படுவார்களோ என்ற பயமும்,விடுதலை புலிகளை தலைமையாக கொண்ட தனிநாடு தனது பிராந்திய வல்லமைக்கே ஆபத்தானது என்ற காரணங்களாலேயே இந்தியா கடைசிவரை தமிழீழத்தை ஆதரிக்கவில்லை.இந்தியா அதற்கு இரு வழிகளை கையாண்டு பார்த்தது ,ஒன்று விடுதலை போராட்டத்தை அடியோடு அளிக்க பார்த்தது முடியவில்லை,இரெண்டு வடக்கு கிழக்கை இணைத்து காலம் செல்ல செல்ல அதை தனது நிர்வாக பிராந்தியமாக ஆக்குவது ,இதுவும் முடியாமல் போனது!ஆனால் இன்று இந்தியா நினைத்தது சாத்தியமாகியிருக்கிறது.இன்று அமெரிக்கா இந்தியாவின் பக்கம்,ஆனால் இந்தியாவுக்கு புதிய நெருக்குவாரம் சீனா,அமெரிக்காவுக்கு தென்னாசியாவில் ஒரு கண்....சரி சின்ன சின்ன நாடுகளை வெருட்டி நீண்ட காலம் நிலை கொள்வது கஷ்டம் என்பதை புரிந்து கொண்டு,இந்தியாவுடனையே நட்பாகிவிட்டது.இன்று இருவருக்கும் எதிரி சீனா!!!அன்று அமெரிக்கா இலங்கையை எப்படி கன்வைத்ததோ அதே பாணியில் இன்று சீனா!!!!
இப்போது இந்தியா இலங்கை அரசு கேட்காமலேயே நிறைய செய்கின்றது!அன்று விடுதலை புலிகள் எப்படி இந்தியாவிடம் எல்லாவற்றையும் வாங்கிவிட்டு பின் கழன்று கொண்டார்களோ,அதே போக்கை தான் இலங்கை அரசும் இப்போ செய்கிறது.அது இந்தியாவுக்கே நன்கு தெரியும்.இருந்தும் ஏன் நாக்கை தொங்க போடுகிறது என்றால்,சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்கவும்,இலங்கையை ராஜ தந்திர ரீதியாக தனக்கு கீழே கொண்டுவரவும் தான்!தற்போதைய நிலையில் இலங்கையை ஆக்கிரமிக்கவோ,அதன் உள்விவகாரங்களில் அளவு கடந்தோ இந்தியாவால் பிரசன்னமாக முடியாது.காரணம் இந்திய அரசியல் போக்கு,அதோடு இந்தியாவின் உள்ளேயே காணப்படும் அச்சுறுத்தல் மிக்க தீவிரவாத செயற்பாடுகள்.அதனால் அமெரிக்காவோடு சேர்ந்து இலங்கையை மிக மிக கவனமாக கண்காணித்து கொண்டிருக்கிறது இந்தியா !
இந்த இடத்தில் இந்தியாவின் முதலாவது திட்டம் அதாவது இலங்கையை நீண்ட நாள் தனது கட்டுபாட்டில்,அல்லது கண்காணிப்பில் வைத்திருப்பது கஷ்டமான காரியம்.
இலங்கையை பணிய வைக்கவும்,சீனாவை கட்டுபடுத்தவும் இந்தியாவுக்கு இருக்கின்ற ஒரே தெரிவு இலங்கையை பிரிப்பது,அதுவும் விடுதலை புலிகள் இல்லாத தனிநாட்டுக்கு அனுமதி அல்லது ஆதரவு வழங்குவது!இது இந்தியாவுக்கு பெரும் அனுகூலத்தை கொடுப்பதோடு,அமைகின்ற தனிநாடு இந்தியாவின் ஆக்கிரமிப்பிலையே இருக்கும்.......ஆக அவர்களாலையே அவலத்தை எதிர்நோக்கி இன்று நிர்க்கதியாகி நிற்கின்ற மக்களை மீளவும் தன் சுயநலத்துக்கு பலியிட போகிறது.இந்த இடத்தில் தான் நம் தமிழ் புத்திஜீவிகள்,தமிழ் உணர்வாளர்கள் புத்திகூர்மையோடும்,உண்மையான கரிசனையோடும் செயற்படவேண்டும்.
சீனாவின் பிரசன்னம் இலங்கையில் அத்துமீறி போகும் போது,நாங்கள் கேட்காமலையே இந்தியா தமிழீழத்தை வழங்க முன்வரும்.அப்படி பட்ட அடிமைப்பட தனிநாடு தேவையில்லை.காரணம் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் அடைக்கலம் பெற்று அங்கு குடியுருமை பெற்றுவிட்டு ,கொடிபிடித்து தமிழீழ கோசம் போட்ட தமிழர்கள் யாருமே அங்கு செல்லபோவதில்லை,(இந்த கண்ராவியில் நம்மை யூதர்களோடு ஒப்பிடுகிறோம் ).இடருக்குள் வாழும் எனது உறவுகள் தான் மீண்டும் அடிமையாக போகிறார்கள்!!!! கண்டவ்ர்களோடு பல்லிளிப்பதை விட்டுவிட்டு நேராக சிங்கள சகோதரர்களோடு கைகோர்ப்போம்!!!ஏனென்றால் உண்மையிலையே தாய் நாட்டை மதிப்பவர்களும்,மனித நேயர்களும் அவர்களிடத்தில் நம்மை விட பலமடங்கு அதிகமாக உள்ளனர்....இந்த விடயம் இப்போ கசக்கும் காரணம் சிங்களவர் - தமிழர் கூட்டணி பல கசப்புணர்வுகளை அடிமனதில் வைத்து கொண்டே செயற்பட தொடங்கும்!அதில் குற்றம் சொல்ல ஒன்றுமில்லை ஏனென்றால் இருசாரார் மனதிலும் எதிர் நிலையே காணப்படும்!!!பரவாயில்லை எல்லாவற்றையும் இழந்தாச்சு,வரட்டு கவுரவங்களையும்,பழைய இரத்த வாடைகளையும் தூக்கி போட்டுவிட்டு சிங்கள சகோதரர்களோடு பேசுவோம்.....தபோதைய சிங்கள புதிய சந்ததிக்கு நம்மை பற்றி புரிய வைப்போம்!!!!
இந்தியா தமிழ் மக்களின் துயர் கண்டு இரங்கி எங்களை ஆதரிக்க போவதில்லை,தனது சுயனலத்துக்கே எங்கள் உறவுகளை பலியிட போகிறது!எங்கள் பிரச்னையை நாங்களே தீர்த்து கொள்கிறோம்,நீங்கள் செய்ததே போதும் என்று அனுப்பி விடுவோம்!!!வெளிநாட்டு இராஜ தந்திரிகள் என்று கோட்டு,சூட்டு போட்டு கொண்டு அலையும் குள்ளனரிகளுடன் பேசி காலம் கடத்தாமல்,சிங்களத்தோடு கதைப்போம்!!!நம்பிக்கை வைத்து செயற்படுவோம் நிச்சயம் பலன் கிடைக்கும்.
இல்லை மீண்டும் தனிநாடு தான் வேணுமென்றால் நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்,இந்தியாவே காலபோக்கில் எங்களுக்காக நீலிகண்ணீர் வடிக்கும்.ஆனால் அப்படி வருகின்ற தனிநாடு நமக்கு இனிப்பாக இருந்தாலும் வருங்கால சந்ததி ( அப்படியென்றால் என்ன ? என்று நம்மவர்கள் சிலர் கேட்பார்கள்!!!நமக்கென்ன என்று இருந்ததால் தானே இவ்வளவும் ) அடிமை பட்டு சின்னாபின்னமாகிவிடும் .ஆனால் கஷ்டங்களை சகித்து கொண்டு சிங்களத்தோடு கைகோர்த்தோம் என்றால் இப்போ ஒரு வேளை கசந்தாலும் நிச்சயமாக நம் வருங்கால சந்ததி நின்மதியாக வாழும்!!!!!
தமிழ் உணர்வாளர்கள் சிந்தியுங்கள்.இல்லை சிங்களவன் கொலைகாரன்,இந்தியா வரும்,அமெரிக்கா தரும் என்றெல்லாம் கனவு கண்டீர்கள் என்றால் ஒரு பிரயோசனமும் இல்லை.
நமக்கு எங்கே அதுக்கு நேரம் ,பின்னே கோவில் திருவிழாவில் பட்டு பீதாம்பரங்களுடன் போய் தேர் இழுக்கணும்,பிள்ளைக்கு அரங்கேற்றம் செய்யணும்,கலியாணவீடு ,சடங்கு ,சம்பிரதாயம் எண்டு எவ்வளவு வேலை.அப்படியே போய்விடுங்கள்,இங்கிருந்து கொண்டு கொடிபிடித்து கோசம் போடாதீர்கள்!!!செய்வதென்றால் உலக அரசியல்களை புரிந்து கொண்டு தூர நோக்கோடு அந்த மக்களுக்காக செய்யுங்கள்,இல்லை நடைமுறை புரியாமல் யாரோ சொல்லுவதை கேட்டு கூட்டம் போடாதீர்கள் !!!
யாழ்ப்பாணத்திலும் ,திருகோணமலையிலும் சிங்களவர்கள் கோவில் (விகாரை )கட்டும் போது என்னவெல்லாம் கதைத்தோம்!!!தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட நில பறிப்பு,சிங்களம் தமிழ் கலாச்சாரத்தை சீர்குலைக்கிறது ,இன்னும் இன்னும் ...........சரி அப்படியே வைத்து கொள்வோம்
கொழும்பில் கோவில் கட்டி வருடாவருடம் சிங்களவனை இடைஞ்சல் செய்யலாம்,கம்பன் விழா,கலாச்சார விழா என்று சிங்களவன் ஊரிலையே கொட்டம் அடிக்கலாம்.....கனக்க வேண்டாம்! அகதியாக வந்த இடத்திலும் நாங்கள் கொட்டம் அடிக்கவில்லை? எதையும் தப்பான கண்ணோட்டத்தில் பார்த்தால் எல்லாமே தப்புதான் !!!!
பழைய கசப்புகளை மறந்து விட்டு இனியும் இலங்கை தமிழன் இரத்தம் சிந்தாமல் வாழ,சிங்களத்தோடு கதைப்போமே? துரோகிகளையும்,வெளிநாட்டு குள்ளனரிகளையும் நம்பாமல் நாங்கள் முடிவெடுப்போம்!!!!! யோசியுங்கள் ஆற அமர்ந்து யோசியுங்கள் .தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் முகாம்களில் வாடும் எமது உறவுகள் வாழ்வை இருட்டாக்கும் என்பதை மறக்க வேண்டாம் !
கடைசியாக ஒன்று சொல்கிறேன் இலங்கை சிங்கப்பூர் மாதிரி ஆவதையும் இந்தியா விரும்பாது .காரணம் அதன் பிறகு தங்கள் வேலைகளுக்கு அனுமதி கிடைக்காதே,ஆக தமிழன் - சிங்களவன் இந்த இடைவெளியை கூட்டுவார்களே ஒழிய சேர விட மாட்டார்கள்.இதை நன்கு ஆழமாக ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ளவேண்டும் !!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக